இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7378ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الْوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ ‏ ‏‏.‏
அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் இழிசொல்லைப் பொறுத்துக்கொள்வதில் அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். ஆயினும் அவன் அவர்களுக்கு நல்வாழ்வளித்து, வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6998ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ،
جُبَيْرٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم ‏ ‏ مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ تَعَالَى إِنَّهُمْ يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ
لَهُ وَلَدًا وَهُوَ مَعَ ذَلِكَ يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ وَيُعْطِيهِمْ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் துன்பச் சொற்களைச் சகித்துக்கொள்வதில் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்கள்; அவனுக்குப் பிள்ளை உண்டெனக் கூறுகிறார்கள். ஆயினும் இதையெல்லாம் மீறி, அவன் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறான்; அவர்களுக்கு (வேண்டியவற்றைக்) கொடுக்கிறான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح