அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஸைனப் அவர்களின் பெயர் பர்ரா என்பதாக இருந்தது. (அப்பெயரின் மூலம்) அவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தமானவர் என்று புகழ்ந்து கொள்கிறார்கள் (என்று கூறப்பட்டது). ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஸைனப் என்று பெயரிட்டார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَبَا رَافِعٍ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ فَقِيلَ لَهَا تُزَكِّي نَفْسَهَا فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ زَيْنَبَ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஸைனப் (ரலி) அவர்களின் (இயற்)பெயர் 'பர்ரா' (புண்ணியவதி) என்பதாக இருந்தது. (அந்தப் பெயரால்) அவர் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு 'ஸைனப்' என்று பெயரிட்டார்கள்.