இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7546ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أُرَاهُ عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ ‏{‏وَالتِّينِ وَالزَّيْتُونِ‏}‏ فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ‏.‏
அல்பரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் ‘வத் தீனி வஸ் ஸைத்தூன்’ (என்று தொடங்கும் அத்தியாயத்தை) ஓதுவதை நான் கேட்டேன். அவர்களை விட அழகிய குரலையோ அல்லது ஓதுதலையோ கொண்ட எவரையும் நான் கேட்டதில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1039ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ فِي الْعِشَاءِ بِالتِّينِ وَالزَّيْتُونِ ‏.‏ فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ ‏.‏
அல்பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூன்’ (என்ற அத்தியாயத்தை) ஓத நான் கேட்டேன். அவர்களை விட அழகான குரலுடைய எவரையும் நான் கேட்டதில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
18639முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَرَأَ النَّبِيُّ ﷺ فِي الْعِشَاءِ وَالتِّينِ وَالزَّيْتُونِ فَلَمْ أَسْمَعْ أَحْسَنَ صَوْتًا وَلَا أَحْسَنَ صَلَاةً مِنْهُ
பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் 'வத்தீனி வஸ்ஸைத்தூன்' (எனும் 95-வது அத்தியாயத்தை) ஓதினார்கள். (அப்போது) அவர்களை விட மிக அழகிய குரலையோ, (அவர்களை விட) அழகிய தொழுகையையோ நான் (ஒருபோதும்) செவியுற்றதில்லை.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح
834மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَن الْبَراء قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْرَأ فِي الْعشَاء: (والتين وَالزَّيْتُون) وَمَا سَمِعت أحدا أحسن صَوتا مِنْهُ
அல்பரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூன்’ (அதாவது, அத்தீன் அத்தியாயத்தை) என்று ஓதுவதை நான் கேட்டேன். அவர்களை விட அழகான குரலுடைய எவரையும் நான் கேட்டதில்லை.”
ஹதீஸ் தரம் : முத்தஃபகுன் அலைஹி (அல்பானி)
مُتَّفق عَلَيْهِ (الألباني)
1006ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن البراء بن عازب رضي الله عنهما قال ‏:‏سمعت النبي صلى الله عليه وسلم قرأ في العشاء بالتين والزيتون، فما سمعت أحدًا أحسن صوتا منه ‏.‏‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏
பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ என்ற (95வது) அத்தியாயத்தை ஓத நான் கேட்டேன். அவர்களை விட அழகிய குரலில் யாரும் அதை ஓத நான் கேட்டதே இல்லை.