அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவர்களிடம் அகலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. மக்கள் (அதிலிருந்து) உளூச் செய்யத் தொடங்கினார்கள். நான் (அம்மக்களின் எண்ணிக்கையை) அறுபதுக்கும் எண்பதுக்கும் இடையில் இருக்கும் என மதிப்பிட்டேன். அப்போது, அன்னாரின் விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வருவதை நான் பார்த்தேன்.