இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

358சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، قَالَ سَمِعْتُ الْحَسَنَ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - يَذْكُرُ عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا كَانَ لإِحْدَانَا إِلاَّ ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ فَإِنْ أَصَابَهُ شَىْءٌ مِنْ دَمٍ بَلَّتْهُ بِرِيقِهَا ثُمَّ قَصَعَتْهُ بِرِيقِهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

எங்களில் (நபியவர்களின் மனைவிகளாகிய) ஒவ்வொருவருக்கும் மாதவிடாய் காலத்தில் உடுத்துவதற்கு ஒரேயொரு ஆடைதான் இருந்தது. அதில் எப்போதெல்லாம் இரத்தம் படுமோ, அப்போதெல்லாம் அதைத் தமது உமிழ்நீரால் ஈரப்படுத்தி, உமிழ்நீரால் சுரண்டி விடுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)