அபுல் மலீஹ் அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு மேகமூட்டமான நாளில் ஒரு போரில் புரைதா (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: "அஸ்ர் தொழுகையை விரைந்து தொழுங்கள். ஏனெனில், 'யார் அஸ்ர் தொழுகையை (அதன் நேரத்திற்குள்) தொழாமல் விட்டுவிடுகிறாரோ, அவரது நற்செயல்கள் அழிந்துவிடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்."
அபுல் மலீஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு மேகமூட்டமான நாளில் புரைதா (ரழி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: 'தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) சீக்கிரம் தொழுங்கள்! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் அஸ்ர் தொழுகையை (வேண்டுமென்றே) விட்டுவிடுகிறாரோ, நிச்சயமாக அவருடைய (அஸ்ர் தொழுகைக்கு முந்தைய) நற்செயல்கள் அழிந்துவிடும்.”'
وعن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : من ترك صلاة العصر فقد حبط عمله ((رواه البخاري)).
புரைதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் அஸ்ர் தொழுகையை (வேண்டுமென்றே) தவறவிடுகிறாரோ, அவருடைய செயல்கள் அழிந்துவிடும்."
(அல்-புகாரி)