இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

847 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ النَّاسُ يَنْتَابُونَ الْجُمُعَةَ مِنْ مَنَازِلِهِمْ مِنَ الْعَوَالِي فَيَأْتُونَ فِي الْعَبَاءِ وَيُصِيبُهُمُ الْغُبَارُ فَتَخْرُجُ مِنْهُمُ الرِّيحُ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ عِنْدِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் (மதீனாவின்) மேட்டுப் பகுதிகளிலுள்ள தங்கள் வீடுகளிலிருந்து ஜும்ஆ தொழுகைக்காக (தொடர்ந்து) வருவார்கள். அவர்கள் (சாதாரண, கம்பளி) போர்வைகளை அணிந்து வருவார்கள். அவர்கள் மீது புழுதி படிந்து, அவர்களிடமிருந்து (வியர்வை கலந்த) துர்நாற்றம் வீசும். இந்நிலையில் அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, நபியவர்கள் என்னிடத்தில் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஜும்ஆவுடைய) இந்த நாளுக்காக நீங்கள் குளித்துத் தூய்மையாகிக்கொண்டால் (அது உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்குமே!)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح