حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، حَدَّثَنَا سَالِمٌ، عَنْ أَبِيهِ، قَالَ رُبَّمَا ذَكَرْتُ قَوْلَ الشَّاعِرِ وَأَنَا أَنْظُرُ، إِلَى وَجْهِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى الْمِنْبَرِ فَمَا نَزَلَ حَتَّى جَيَّشَ كُلُّ مِيزَابٍ بِالْمَدِينَةِ فَأَذْكُرُ قَوْلَ الشَّاعِرِ وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلأَرَامِلِ وَهُوَ قَوْلُ أَبِي طَالِبٍ .
சாலிம் அவர்கள் தனது தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
“நான் மிம்பரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருமுகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சில சமயங்களில் ஒரு கவிஞரின் வார்த்தைகளை நினைவுகூர்வேன். (நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டி துஆ செய்ததன் விளைவாக) மதீனாவின் ஒவ்வொரு கூரைக் குழாயிலும் (மழை நீர்) வழிந்தோடும் வரை அவர்கள் (மிம்பரிலிருந்து) கீழே இறங்கவில்லை. அப்போது அந்தக் கவிஞர் கூறியதையும் நான் நினைவுகூர்ந்தேன்:
‘அவர் வெண்மையானவர்; அவருடைய திருமுகத்தின் பொருட்டால் மேகத்திடம் மழை வேண்டப்படுகின்றது.
அவர் அநாதைகளுக்குப் புகலிடமும், விதவைகளுக்குப் பாதுகாவலரும் ஆவார்.’