حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعِي رَجُلاَنِ مِنَ الأَشْعَرِيِّينَ، فَقُلْتُ مَا عَلِمْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ. فَقَالَ لَنْ أَوْ لاَ نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அஷ்அரீ கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நான் (நபி (ஸல்) அவர்களிடம்), 'அவ்விருவரும் (ஒரு பொறுப்பான) பணியைக் கோருகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நம்முடைய (இந்த) பணியை யார் விரும்புகிறாரோ அவரை நாம் இதற்கு நியமிக்க மாட்டோம்' என்று கூறினார்கள்.
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எமது அலுவலில் (அதிகாரப் பதவியில்) அதனை (அதிகாரப் பதவியை) விரும்பும் (அல்லது தேடும்) ஒருவரை நாம் ஒருபோதும் நியமிக்க மாட்டோம் - அல்லது நாம் நியமிப்பதில்லை."