எங்களுக்கு, மீசையைக் கத்தரித்தல், நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளைப் பிடுங்குதல், மர்ம உறுப்பு முடிகளை மழித்தல் ஆகியவற்றிற்காக, அவை நாற்பது இரவுகளுக்கு மேல் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا صَدَقَةُ الدَّقِيقِيُّ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَلْقَ الْعَانَةِ وَتَقْلِيمَ الأَظْفَارِ وَقَصَّ الشَّارِبِ وَنَتْفَ الإِبْطِ أَرْبَعِينَ يَوْمًا مَرَّةً . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ عَنْ أَنَسٍ لَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وُقِّتَ لَنَا وَهَذَا أَصَحُّ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பதற்கும், நகங்களை வெட்டுவதற்கும், மீசையைக் கத்தரிப்பதற்கும், அக்குள் முடிகளைப் பிடுங்குவதற்கும் நாற்பது நாட்களை நிர்ணயித்தார்கள்.
அபூதாவூத் கூறினார்கள்: ஜஃபர் இப்னு சுலைமான் அவர்கள் அபூ இம்ரான் அவர்களிடமிருந்து அனஸ் (ரழி) அவர்கள் வழியாக இதை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பில் அவர் நபி (ஸல்) அவர்களைக் குறிப்பிடவில்லை. அவர்கள் கூறினார்கள்: எங்களுக்காக நாற்பது நாட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதுவே மிகவும் சரியான அறிவிப்பாகும்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீசையைக் கத்தரிப்பதற்கும், நகங்களை வெட்டுவதற்கும், மறைவிட முடிகளை மழிப்பதற்கும், அக்குள் முடிகளைப் பிடுங்குவதற்கும், (அவற்றை) நாற்பது நாட்களுக்கு மேல் நாம் விட்டுவிடக்கூடாது என்று எங்களுக்கு காலவரையறையை நிர்ணயித்தார்கள்."
மீசையைக் கத்தரிப்பது, மறைவிட முடிகளை மழிப்பது, அக்குள் முடிகளைப் பிடுங்குவது மற்றும் நகங்களை வெட்டுவது தொடர்பாக எங்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டது. நாங்கள் அதை நாற்பது நாட்களுக்கு மேல் விட்டுவிடக் கூடாது.