அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக்கடனை நிறைவேற்றச் செல்லும்போதெல்லாம், நானும் மற்றொரு சிறுவனும் (மறைவிடங்களைச் சுத்தம் செய்வதற்காக) தண்ணீர் நிரம்பிய ஒரு குவளையையும், ஒரு குட்டையான ஈட்டியையும் (அல்லது தடியையும்) எடுத்துச் செல்வது வழக்கம்.