ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குஸ்ல் செய்வோம். (நீரை எடுப்பதில்) நான் அவர்களை முந்துவேன்; அவர்களோ என்னை முந்துவார்கள். (அப்போது) அவர்கள், 'எனக்காக விட்டுவை' என்று கூறுவார்கள்; நானும், 'எனக்காக விட்டுவை' என்று கூறுவேன்."