அபூ ஹுபைஷின் மகள் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே! நான் தூய்மையடைவதில்லை; ஆகவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?" என்று கேட்டார். அதற்கு அவர் (ஸல்) கூறினார்கள்: "இல்லை; அது ஒரு நாளம்(தான்)."
காலித் அவர்கள், தாம் (ஹிஷாமிடம்) படித்துக் காட்டிய செய்தியில் கூறியதாவது: "(அது ஒரு நாளமேயன்றி) அது மாதவிடாய் அல்ல. எனவே உனக்கு மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. அது சென்றுவிட்டால் உன்னிடமிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்."