حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு இரவு தொழுதேன்; அப்போது அவர்களின் இடது பக்கம் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையைப் பின்னாலிருந்து பிடித்து, என்னைத் தம் வலப்பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு (அவர்கள் தொழுது முடித்து) உறங்கினார்கள். பின்னர் முஅத்தின் அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.