அபூ உமாமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அம்ர் இப்னு அபஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக எனக்கு அறிவித்தார்கள்: “ஓர் அடியானுக்கு அல்லாஹ் மிக நெருக்கமாக இருப்பது இரவின் கடைசிப் பகுதியில்தான். ஆகவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூருபவர்களில் ஒருவராக இருக்க உங்களால் முடியுமானால், அவ்வாறே செய்யுங்கள்.”