அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூக்கத்தில் அலட்சியம் என்பதே இல்லை. அலட்சியம் என்பது, ஒருவர் விழித்திருக்கும்போது, ஒரு தொழுகையை (அதன் நேரம் முடிந்து) அடுத்த தொழுகையின் நேரம் நுழையும் வரை தாமதப்படுத்துவதுதான்.