அப்துல்ஹமீது இப்னு மஹ்மூத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களுடன் ஒரு ஜும்ஆ அன்று தொழுதேன். (அப்போது மக்கள் நெருக்கடியால்) நாங்கள் தூண்களை நோக்கித் தள்ளப்பட்டோம். அதனால் (வரிசையைச் சரியாக அமைக்க முடியாமல்) நாங்கள் முன்னும் பின்னுமாக நின்றோம். அப்போது அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இதை (தூண்களுக்கு இடையில் நின்று வரிசையைத் துண்டிப்பதை) தவிர்த்து வந்தோம்.'