அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது தொடையில் தட்டிவிட்டு கூறினார்கள்: "தொழுகையை அதன் (குறிப்பிட்ட) நேரத்தை விட்டும் தாமதப்படுத்தும் மக்களுக்கு மத்தியில் நீங்கள் உயிர் வாழ்ந்தால் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?"
அவர் (அபூ தர் (ரழி) அவர்கள்) கேட்டார்கள்: "(இந்த சூழ்நிலையில்) தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?"
அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: "தொழுகையை அதன் (சரியான) நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பின்னர் உங்கள் தேவைகளை (முடிக்க) செல்லுங்கள். (அதன் பிறகு) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு, நீங்கள் பள்ளிவாசலில் இருந்தால், (அவர்களுடன் ஜமாஅத்தாக) மீண்டும் தொழுங்கள்."