அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் (தம் தோழர்களை நோக்கித்) திரும்பி அவர்கள் கூறினார்கள்: ஓ இன்னாரே, நீர் ஏன் உமது தொழுகையை செவ்வனே நிறைவேற்றுவதில்லை? தொழுகின்றவர் தாம் எவ்வாறு தொழுகின்றார் என்பதைக் கவனிப்பதில்லையா? அவர் தமக்காகவே தொழுகின்றார் அல்லவா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எனக்கு முன்னால் பார்ப்பது போலவே எனக்குப் பின்னாலும் பார்க்கின்றேன்.