அபூ ஸலமா இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இவர்களுக்கு முன்பாக "வானம் பிளக்கும் போது" (திருக்குர்ஆன், 84:1) என்ற வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தார்கள். (தொழுகையை) முடித்த பிறகு, அவர் இவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (வசனத்திற்கு) ஸஜ்தா செய்தார்கள் என அறிவித்தார்கள்.