அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகையைக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் தக்பீர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) கூறி, தமது கைகளை உயர்த்தினார்கள். அவர்கள் ருகூஃ செய்தபோது, தமது கைகளைச் சேர்த்து (விரல்களைப் பிணைத்து), அவற்றை தமது முழங்கால்களுக்கு இடையில் வைத்தார்கள்.
இந்த (செய்தி) ஸஃத் (இப்னு அபீ வக்காஸ் ரழி) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கூறினார்கள்: என் சகோதரர் உண்மையே கூறினார்கள். நாங்கள் இப்படிச் செய்து வந்தோம்; பின்னர் நாங்கள், அதாவது, கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம்.