இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6398ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكَ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ ‏ ‏ رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَاىَ وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ ‏ ‏‏.‏ وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏ بِنَحْوِهِ.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் பிரார்த்தனையுடன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள்: ரப்பிஃக்ஃபிர் லீ கதீஅத்தீ வ ஜஹ்லீ வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த அஃலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய வ அம்தீ, வ ஜஹ்லீ வ ஜித்தீ, வ குல்லு தாலிக இந்தீ. அல்லாஹும்மஃக்ரிஃப்லீ மா கத்தம்த்து வமா அஃகர்த்து வமா அஸ்ரர்த்து வமா அஃலன்து. அன்தல் முகத்திமு வ அன்தல் முஅஃகிரு, வ அன்த அலா குல்லி ஷைஇன் கதீர்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1124சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها فَقَدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَضْجَعِهِ فَجَعَلْتُ أَلْتَمِسُهُ وَظَنَنْتُ أَنَّهُ أَتَى بَعْضَ جَوَارِيهِ فَوَقَعَتْ يَدِي عَلَيْهِ وَهُوَ سَاجِدٌ وَهُوَ يَقُولُ ‏ ‏ اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் இல்லாததை நான் கவனித்தேன். அதனால் நான் அவர்களைத் தேட ஆரம்பித்தேன், அவர்கள் தங்களின் அடிமைப் பெண்களில் ஒருவரிடம் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர், அவர்கள் ஸஜ்தா செய்து, "அல்லாஹும்மக்ஃபிர்லீ மா அஸ்ரர்து வ மா அஃலன்து (அல்லாஹ்வே, நான் மறைவாகச் செய்த மற்றும் வெளிப்படையாகச் செய்த (பாவத்)தை மன்னிப்பாயாக)" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது என் கை அவர்கள் மீது பட்டது.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
897சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَزِيدَ، عَنْ حُذَيْفَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ ‏ ‏ رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ‏ ‏ ‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் கூறுவார்கள்:

“ரப்பிக்ஃபிர் லீ, ரப்பிக்ஃபிர் லீ (என் இறைவா என்னை மன்னிப்பாயாக, என் இறைவா என்னை மன்னிப்பாயாக).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)