அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னு புஹைனா அல்-அஸதி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையில்) தாம் அமரவேண்டிய இரண்டாவது ரக்அத்தில் (அமராமல்) எழுந்து நின்று, தமது தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகையின் இறுதியில் இருந்தபோது, ஸலாம் கொடுப்பதற்கு முன்பு ஸஜ்தாச் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.