அபூதர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், ஓர் அடியான் தொழுகையில் இருக்கும்போது, அவன் (வேறெங்கும்) திரும்பாத வரை, அவனை முன்னோக்கிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் (வேறெங்கும்) திரும்பினால், (அல்லாஹ்) அவனை விட்டுத் திரும்பிவிடுகிறான்."