அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், முகத்தில் நற்செய்தி தவழ வந்தார்கள். நாங்கள், "தங்கள் முகத்தில் நற்செய்தியை நாங்கள் காண்கிறோமே!" என்று கூறினோம்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "என்னிடம் வானவர் (ஜிப்ரீல்) வந்து, 'முஹம்மதே! உமது இறைவன் கூறுகிறான்: யாரேனும் ஒருவர் தங்கள் மீது (ஒருமுறை) ஸலவாத் கூறினால், அவருக்காக நான் பத்து முறை அருள்புரிவேன் என்பதும்; யாரேனும் ஒருவர் தங்கள் மீது ஸலாம் கூறினால், அவருக்காக நான் பத்து முறை ஸலாம் கூறுவேன் என்பதும் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கூறினார்."