ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் முடிவில்) தங்களின் கன்னத்தின் வெண்மையை நான் காணுமளவிற்கு, தமது வலப்புறமும் இடப்புறமும் சலாம் கூறுவதை நான் கண்டேன்."
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இறுதியில்) வலப்பக்கம் (திரும்பியபோது), அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் காண்பது போன்றுள்ளது. (அப்போது அவர்கள்) 'அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்' என்றும், தமது இடப்பக்கம் (திரும்பியபோது) 'அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்' என்றும் கூறினார்கள்.