சில பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், தங்களுக்காக ஒரு நாளை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள், ஏனெனில் ஆண்கள் அன்னாரின் நேரத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதன் பேரில் அன்னார் அவர்களுக்கு மார்க்க போதனைகள் மற்றும் கட்டளைகளுக்காக ஒரு நாளை வாக்குறுதியளித்தார்கள். அவ்வாறான ஒரு பாடத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால், அக்குழந்தைகள் அப்பெண்ணை நரக நெருப்பிலிருந்து காப்பார்கள்." அப்போது ஒரு பெண் கேட்டார், "இரண்டு குழந்தைகள் மட்டும் இறந்தால்?" அன்னார் பதிலளித்தார்கள், "இரண்டு குழந்தைகளாக இருந்தாலும் (அவர்கள் அவளை நரக நெருப்பிலிருந்து காப்பார்கள்)."