ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆ) தொழுகையை தொழுவோம், பின்னர் நாங்கள் திரும்பி வந்து தண்ணீர் சுமக்கும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம். ஹசன் (அறிவிப்பாளர்களில் ஒருவர்) அவர்கள் கூறினார்கள்: நான் ஜஃபர் அவர்களிடம் அது எந்த நேரம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்.. அது சூரியன் நண்பகலை கடக்கும் நேரமாகும்.