حَدَّثَنَا آدَمُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ ـ أَوْ قَدْ خَرَجَ ـ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்திக் கொண்டிருந்தபோது கூறினார்கள்: "உங்களில் எவரேனும் (பள்ளிவாசலுக்கு) வரும்போது இமாம் குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்திக் கொண்டிருந்தாலோ, அல்லது (குத்பா நிகழ்த்துவதற்காக மிம்பருக்கு) வந்துவிட்டிருந்தாலோ, அவர் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்."
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியபோது கூறினார்கள்: “உங்களில் எவரேனும் வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) வரும்போது, இமாம் (மிம்பருக்கு) வந்து (உரை நிகழ்த்த ஆரம்பித்து)விட்டாலும் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.”
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
சுலைக் (ரழி) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார். (முந்தைய அறிவிப்பில் உள்ளதைப் போன்றே) இதிலும் செய்தி இடம்பெற்றுள்ளது. (அத்துடன்) "பிறகு (நபி (ஸல்) அவர்கள்) மக்களை நோக்கித் திரும்பி, 'உங்களில் ஒருவர் (பள்ளிக்கு) வந்து, இமாம் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, அவர் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்; அவற்றைச் சுருக்கமாகத் தொழட்டும்' என்று கூறினார்கள்" என்பது கூடுதலாக இடம்பெற்றுள்ளது.