மூஸா இப்னு ஸலமா ஹுழலீ கூறினார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கேட்டேன்: நான் மக்காவில் இருக்கும்போதும், இமாமுடன் சேர்ந்து தொழாதபோதும் (பயணத் தொழுகையாக) எவ்வாறு தொழ வேண்டும்? அவர்கள் கூறினார்கள்: இரண்டு ரக்அத்கள் (தொழுவது), அபுல் காஸிம் (ஸல்) அவர்களின் சுன்னாவாகும்.