இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

904 a, bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، قَالَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَصْحَابِهِ فَأَطَالَ الْقِيَامَ حَتَّى جَعَلُوا يَخِرُّونَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَصَنَعَ نَحْوًا مِنْ ذَاكَ فَكَانَتْ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّهُ عُرِضَ عَلَىَّ كُلُّ شَىْءٍ تُولَجُونَهُ فَعُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ حَتَّى لَوْ تَنَاوَلْتُ مِنْهَا قِطْفًا أَخَذْتُهُ - أَوْ قَالَ تَنَاوَلْتُ مِنْهَا قِطْفًا - فَقَصُرَتْ يَدِي عَنْهُ وَعُرِضَتْ عَلَىَّ النَّارُ فَرَأَيْتُ فِيهَا امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ تُعَذَّبُ فِي هِرَّةٍ لَهَا رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ وَرَأَيْتُ أَبَا ثُمَامَةَ عَمْرَو بْنَ مَالِكٍ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ ‏.‏ وَإِنَّهُمْ كَانُوا يَقُولُونَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَخْسِفَانِ إِلاَّ لِمَوْتِ عَظِيمٍ وَإِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُرِيكُمُوهُمَا فَإِذَا خَسَفَا فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ ‏"‏ ‏.‏
وَحَدَّثَنِيهِ أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏"‏ وَرَأَيْتُ فِي النَّارِ امْرَأَةً حِمْيَرِيَّةً سَوْدَاءَ طَوِيلَةً ‏"‏ ‏.‏ وَلَمْ يَقُلْ ‏"‏ مِنْ بَنِي إِسْرَائِيلَ ‏"‏ ‏.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மிகக் கடுமையான வெப்பம் கொண்ட ஒரு நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் தொழுதார்கள். (மக்கள்) கீழே விழும் அளவிற்குத் தமது நிலையை (கியாமை) நீண்ட நேரம் ஆக்கினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். பிறகு (தலையை) உயர்த்திய பின் நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு (மீண்டும்) ருகூஃ செய்தார்கள்; நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். பிறகு (தலையை) உயர்த்திய பின் நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (இரண்டாம் ரக்அத்திற்கு) எழுந்து நின்று, அதுபோன்றே செய்தார்கள். ஆகவே, (மொத்தம்) நான்கு ருகூஃகளும் நான்கு சஜ்தாக்களும் அமைந்தன.

பிறகு அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் நுழையவிருக்கும் ஒவ்வொன்றும் எனக்கு (இப்போது) எடுத்துக் காட்டப்பட்டன. சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது. அதில் ஒரு (திராட்சைக்) குலையை நான் பற்றிக்கொள்ள முயன்றிருந்தால், அதை நான் எடுத்திருப்பேன்" -அல்லது "நான் அதை எட்ட முயன்றேன்; ஆனால் என் கை அதை எட்டவில்லை" என்று கூறினார்கள். "நரகமும் எனக்குக் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கண்டேன். ஒரு பூனையின் விஷயத்தில் அவள் வேதனை செய்யப்பட்டாள். அவள் அதைக்கட்டி வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவளிக்கவுமில்லை; பூமியிலுள்ள பூச்சிகளைத் தின்பதற்கேனும் அதை அவள் விட்டுவிடவுமில்லை. மேலும், அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் (என்பவர்) நரகத்தில் தம் குடல்களை இழுத்துக்கொண்டு திரிவதை நான் கண்டேன்."

"மேலும், சூரியனும் சந்திரனும் ஏதேனும் ஒரு பெரிய மனிதரின் மரணத்தின் போதுதான் கிரகணம் அடைகின்றன என்று (அக்கால மக்கள்) கூறிவந்தனர். (அப்படியல்ல;) அவையிரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். அல்லாஹ் உங்களுக்கு அவற்றை (அடையாளமாகக்) காட்டுகிறான். ஆகவே, கிரகணம் பிடிப்பதைப் பார்த்தால் அது விலகும்வரை தொழுங்கள்."

(அறிவிப்பாளர்) ஹிஷாம் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் வரும் மற்றோர் அறிவிப்பில், "(நரகத்தில்) ஹிம்யர் குலத்தைச் சேர்ந்த, கருப்பான, உயரமான ஒரு பெண்ணைக் கண்டேன்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் "பனூ இஸ்ராயீல் குலத்தைச் சேர்ந்தவள்" என்று இடம்பெறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1179சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَوْمٍ شَدِيدِ الْحَرِّ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَصْحَابِهِ فَأَطَالَ الْقِيَامَ حَتَّى جَعَلُوا يَخِرُّونَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ رَكَعَ فَأَطَالَ ثُمَّ رَفَعَ فَأَطَالَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ قَامَ فَصَنَعَ نَحْوًا مِنْ ذَلِكَ فَكَانَ أَرْبَعَ رَكَعَاتٍ وَأَرْبَعَ سَجَدَاتٍ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு வெப்பமான நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். மக்கள் (சோர்வினால்) கீழே விழத் தொடங்கும் வரை நின்ற நிலையை நீட்டினார்கள். பின்னர் அவர்கள் ருகூஃ செய்து, அதை நீட்டினார்கள்; பின்னர் தமது தலையை உயர்த்தி, (அந்நிலையிலும்) நீட்டி நின்றார்கள்; பின்னர் மீண்டும் ருகூஃ செய்து, அதை நீட்டினார்கள்; பின்னர் தமது தலையை உயர்த்தி, (அந்நிலையிலும்) நீட்டி நின்றார்கள்; பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து, பிறகு எழுந்து நின்றார்கள்; பின்னர் அவ்வாறே செய்தார்கள். இவ்வாறு (இரண்டு ரக்அத்துகளில்) நான்கு ருகூஃகளையும் நான்கு ஸஜ்தாக்களையும் செய்தார்கள். பின்னர் அறிவிப்பாளர் ஹதீஸின் மீதமுள்ள பகுதியைக் கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)