இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள்; மக்களும் அவர்களுடன் நின்றார்கள். அவர்கள் தக்பீர் கூறினார்கள்; மக்களும் அவர்களுடன் தக்பீர் கூறினார்கள். அவர்கள் ருகூஃ செய்தார்கள்; அவர்களில் ஒரு பிரிவினர் (நபி (ஸல்) அவர்களுடன்) ருகூஃ செய்தார்கள். பிறகு அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள்; அவர்களும் (நபி (ஸல்) அவர்களுடன்) ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு அவர்கள் இரண்டாவது (ரக்அத்துக்காக) எழுந்தார்கள். (நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ரக்அத்தை முடித்த) ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து நின்று தங்கள் சகோதரர்களைப் பாதுகாத்தார்கள். அப்போது மற்றொரு பிரிவினர் வந்து, அவர்களுடன் ருகூஃ மற்றும் ஸஜ்தாச் செய்தார்கள். மக்கள் அனைவரும் தொழுகையிலேயே இருந்தனர்; ஆயினும், அவர்களில் சிலர் சிலரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.