حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் குத்பா நிகழ்த்துவதற்கு முன்பு இரு ஈத் தொழுகைகளையும் தொழுவார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ خَالِدَ بْنَ الْحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَانَ يَنْحَرُ فِي الْمَنْحَرِ. قَالَ عُبَيْدُ اللَّهِ مَنْحَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
நாஃபிஉ அவர்கள் அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் மன்ஹரில் (தமது குர்பானியை) அறுப்பவர்களாக இருந்தார்கள். (உபைதுல்லாஹ் என்ற அறிவிப்பாளர் கூறினார்: அது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மன்ஹர் (ஆகும்).
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ، اللَّهِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் குத்பாவுக்கு (சொற்பொழிவுக்கு) முன்பு இரு 'ஈத்' (பெருநாள்) தொழுகைகளையும் தொழுவார்கள்.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْقَزَعِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்-கஸஃ'வைத் (தலையின் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை விட்டுவிடுவதை) தடை செய்தார்கள்.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْوَاصِلَةَ وَالْمُوتَصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُوتَشِمَةَ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒட்டுமுடி அணிவிக்கும் பெண்ணையும், அதை அணிந்து கொள்ளும் பெண்ணையும், பச்சை குத்தும் பெண்ணையும், அதை குத்திக் கொள்ளும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்."
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மோதிரத்தில் இருந்த பொறிப்பு 'முஹம்மது ரஸூலுல்லாஹ்' (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்பதாகும்.