حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسَجًّى بِثَوْبِهِ فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْهُ وَقَالَ دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ . وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ الْجَارِيَةِ الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ .
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது மினாவுடைய நாட்களில் இரண்டு சிறுமிகள் (தஃப்) அடித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது ஆடையால் (உடலை) போர்த்திக்கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் கடிந்துகொண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் முகத்திலிருந்து ஆடையை) விலக்கி, "அபூபக்ரே! அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்; ஏனெனில், இவை பெருநாள் நாட்களாகும்" என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தம் மேலாடையால் மறைத்துக்கொண்டிருக்க, நான் அபிசீனியர்கள் (ஈட்டி விளையாட்டுகள் போன்ற) விளையாட்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு சிறுமியாக இருந்தேன். எனவே, (இத்தகைய) விளையாட்டில் விருப்பம் கொண்ட இளம் வயதுச் சிறுமியின் ஆர்வத்தை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்."