"ஒரு பெண் ஒரு புர்தாவைக் கொண்டு வந்தார்" - ஸஹ்ல் (ரழி) அவர்கள், "புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம், அது இரு ஓரங்களிலும் நெய்யப்பட்ட ஒரு மேலாடை" என்றார்கள் - மேலும் அப்பெண், 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அணிவதற்காக இதை நான் என் கைகளால் நெய்தேன்' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது தேவைப்பட்டதால் அதை எடுத்துக்கொண்டார்கள், பிறகு அவர்கள் அதைத் தமது இசாராக (கீழாடையாக) அணிந்தவாறு எங்களிடம் வந்தார்கள்.
وعن سهل بن سعد رضي الله عنه، أن امرأة جاءت إلى رسول الله صلى الله عليه وسلم ببردة منسوجة فقالت: نسجتها لأكسوكها، فأخذها النبي صلى الله عليه وسلم محتاجاً إليها ، فخرج إلينا وإنها إزاره، فقال فلان، اكسونيها ما أحسنها! فقال:” نعم” فجلس النبي صلى الله عليه وسلم فى المجلس ثم رجع فطواها ثم أرسل به إليه: فقال له القوم: ما أحسنت! لبسها النبي صلى الله عليه وسلم محتاجاً إليها ثم سألته وعلمت أنه لا يرد سائلاً ، فقال: إنى والله ما سألته لألبسها وإنما سألته لتكون كفني، قال سهل: فكانت كفنه. ((رواه البخاري))
ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பெண்மணி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நெய்யப்பட்ட ஒரு துணியைக் கொண்டு வந்து, "நீங்கள் அணிவதற்காக இதை நான் என் கைகளால் நெய்தேன்" என்று கூறினார்கள். அவர்களுக்கு அது தேவைப்பட்டதால், அதை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அதை இடுப்பாடையாக அணிந்துகொண்டு வெளியே வந்தார்கள். ஒருவர், "இது எவ்வளவு அழகாக இருக்கிறது! தயவுசெய்து இதை எனக்குக் கொடுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரி" என்று கூறினார்கள். அவர்கள் சிறிது நேரம் எங்கள் சபையில் இருந்தார்கள், பின்னர் திரும்பிச் சென்று, அதை மடித்து அந்த மனிதருக்கு அனுப்பி வைத்தார்கள். மக்கள் (அந்த மனிதரிடம்), "நீர் செய்தது சரியல்ல. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அணிந்திருந்தார்கள், அது அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது. அவர்கள் எந்தக் கோரிக்கையையும் மறுக்க மாட்டார்கள் என்று உமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீர் அவர்களிடம் அதைக் கேட்டீரே" என்று கூறினார்கள். அவர் கூறினார்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் அதை அணிவதற்காகக் கேட்கவில்லை. என் மரணத்திற்குப் பிறகு அது என்னுடைய கஃபனாக (இறுதி ஆடையாக) ஆக வேண்டும் என்பதற்காகவே அவர்களிடம் அதைக் கேட்டேன்." ஸஹ்ல் (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்) அவர்கள் கூறினார்கள்: உண்மையில் அது அவருடைய கஃபனாகவே பயன்படுத்தப்பட்டது.