அப்பாத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களுக்காக தாம் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக, அன்னாரின் ஜனாஸாவை பள்ளிவாசலுக்குள் கொண்டுவர உத்தரவிட்டார்கள். மக்கள் அவர்களின் இந்தச் செயலை ஆட்சேபித்தார்கள். அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் இப்னுல் பைளாஃ (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையைப் பள்ளிவாசலில்தான் நடத்தினார்கள் என்பதை மக்கள் எவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டார்கள்.
அப்துல் வாஹித் பின் ஹம்ஸாவிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்-ஸுபைர் அவர்கள் தன்னிடம் ஆயிஷா (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் பைளா (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதிற்குள் அன்றி வேறு எங்கும் தொழவில்லை” என்று கூறியதாகத் தெரிவித்தார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் இப்னு பைளா (ரழி) அவர்களுக்குப் பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள்.