அபூ இஸ்ஹாக் அஸ்-ஸபீஈ கூறினார்கள்:
"ஸுலைமான் பின் ஸுரத் (ரழி) அவர்கள் காலித் பின் உர்ஃபதா (ரழி) அவர்களிடம் - அல்லது, காலித் (ரழி) அவர்கள் ஸுலைமான் (ரழி) அவர்களிடம் - 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் தனது வயிற்றால் கொல்லப்படுகிறாரோ, அவர் கப்ரில் வேதனை செய்யப்படமாட்டார்" என்று கூற நீங்கள் கேட்டீர்களா?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "ஆம்" என்று கூறினார்கள்."