இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4974ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ فَقَوْلُهُ لَنْ يُعِيدَنِي كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الْخَلْقِ بِأَهْوَنَ عَلَىَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ فَقَوْلُهُ اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الأَحَدُ الصَّمَدُ لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفْأً أَحَدٌ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் கூறினான்: 'ஆதமுடைய மகன் என்னைப் பொய்ப்பிக்கிறான்; அவ்வாறு செய்ய அவனுக்கு உரிமை இல்லை. அவன் என்னை நிந்திக்கிறான்; அவ்வாறு செய்ய அவனுக்கு உரிமை இல்லை.

அவன் என்னைப் பொய்ப்பிப்பதாவது, 'என்னை (முதலில்) படைத்தது போன்று, மீண்டும் அவன் என்னை உயிர்ப்பிக்கமாட்டான்' என்று கூறுவதாகும். (உண்மையில்) என்னைப்பொருத்தவரை ஆரம்பமாகப் படைப்பது, மீண்டும் படைப்பதை விட எனக்கு எளிதானதல்ல (இரண்டும் எனக்கு சமமானதே, எவ்வித சிரமமும் அற்றதே).

அவன் என்னை நிந்திப்பதாவது, 'அல்லாஹ் தனக்கென ஒரு பிள்ளையை ஏற்படுத்திக்கொண்டான்' என்று கூறுவதாகும். நானோ 'அல்-அஹத்' (ஏகன்); 'அஸ்-ஸமத்' (தேவையற்றவன்; அனைத்துப் படைப்புகளும் தன்னிடம் தேவையுடையவனாக இருக்கின்ற அதிபதி). நான் (யாரையும்) பெறவுமில்லை; (யாராலும்) பெறப்படவுமில்லை. எனக்கு நிகராக எவரும் இல்லை'."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح