அர்ஃபஜா அவர்கள் கூறினார்கள்:
"நான் உத்பா பின் ஃபர்கத் (ரழி) அவர்களுடன் ஒரு வீட்டில் இருந்தேன். நான் ஒரு ஹதீஸை அறிவிக்க விரும்பினேன். ஆனால் அங்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் இருந்தார்; ஹதீஸை அறிவிப்பதற்கு என்னை விட அவரே அதிக தகுதியுடையவர் என்று நான் கருதினேன். எனவே அந்த மனிதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்: 'ரமளான் மாதத்தில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன; மேலும் மாறுசெய்யும் ஒவ்வொரு ஷைத்தானும் விலங்கிடப்படுகிறான். ஒவ்வொரு இரவும் ஓர் அழைப்பாளர், 'நன்மையைத் தேடுபவரே! (முன்னேறி) வாரும்! தீமையைத் தேடுபவரே! (தீமையை விட்டு) நிறுத்திக்கொள்!' என்று அழைக்கிறார்.'"