உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு (பெண்ணுக்கு) ஒரு 'முகாதப்' (விடுதலை ஒப்பந்தம் செய்த அடிமை) இருந்து, அவரிடம் (அவருடைய விடுதலை ஒப்பந்தத் தொகையை) செலுத்தப் போதுமான (செல்வம்) இருந்தால், அவள் அவனிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள (ஹிஜாப் அணிய) வேண்டும்.