அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹாவின் இரண்டு ரக்அத்களைத் தொழும்படியும், வித்ருத் தொழும் வரை உறங்க வேண்டாம் என்றும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டார்கள்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்: வித்ரு தொழுத பின் உறங்குவது, வெள்ளிக்கிழமை அன்று குஸ்ல் செய்வது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது."
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ளுஹாவுடைய இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், வித்ரு தொழுத பிறகே உறங்குமாறும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள். (ஸஹீஹ்)."