இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1507ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن جابر بن عبد الله رضي الله عنه الله عنهما قال‏:‏ لما حضرت أحد دعاني أبي من الليل فقال‏:‏ ما رآني إلا مقتولا في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم، وإني لا أترك بعدي أعز علي منك غير نفس رسول الله صلى الله عليه وسلم، وإن علي دينا فاقضِ، واستوصِ بأخواتك خيرًا، فأصبحنا، فكان أول قتيل، ودفنت معه آخر في قبره، ثم لم تطب نفسي أن أتركه مع آخر، فاستخرجته بعد ستة أشهر، فإذا هو كيوم وضعته غير أذنه، فجعلته في قبر على حدة‏"‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உஹுத் போர் நெருங்கியபோது, இரவில் என் தந்தை என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் கொல்லப்படுபவர்களில் முதன்மையானவராக நான் இருப்பேன் என்றே கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களைத் தவிர, உன்னை விட எனக்கு மிகவும் விருப்பமானவராக (வேறு எவரையும்) நான் விட்டுச் செல்லவில்லை. எனக்குக் கடன் இருக்கிறது; அதைத் தீர்த்துவிடு. மேலும், உனது சகோதரிகளிடம் நல்லவிதமாக நடந்துகொள்" என்று கூறினார்கள்.

பொழுது விடிந்ததும் கொல்லப்பட்டவர்களில் அவரே முதலாவதாக இருந்தார். நான் அவரை மற்றொருவருடன் சேர்த்து (ஒரே) குழியில் அடக்கம் செய்தேன். பிறகு, அவரை மற்றொருவருடன் சேர்த்து விட்டுவிடுவதை என் மனம் விரும்பவில்லை. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரைத் தோண்டி எடுத்தேன். அப்போது, அவரது காதைத் தவிர, அவரை நான் (முதலில்) அடக்கம் செய்த நாளில் இருந்ததைப் போன்றே அவர் இருந்தார். ஆகவே, அவரைத் தனித்து ஒரு குழியில் அடக்கம் செய்தேன்.

(நூல்: புகாரி)