அபூ நவ்ஃபல் பின் அபீ அக்ரப் அவர்கள், தம் தந்தை (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நோன்பு பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பீராக!' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (நாட்களை) அதிகப்படுத்துங்கள்; எனக்கு அதிகப்படுத்துங்கள்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், '(நீ) ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அதிகப்படுத்துங்கள்; எனக்கு அதிகப்படுத்துங்கள்’ (என்கிறாய்). ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் (நோற்பீராக!)' என்று கூறினார்கள்.
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அதிகப்படுத்துங்கள்; எனக்கு அதிகப்படுத்துங்கள்; திண்ணமாக, நான் என்னிடம் (கூடுதல்) சக்தியை உணர்கிறேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'எனக்கு அதிகப்படுத்துங்கள்; எனக்கு அதிகப்படுத்துங்கள்; நான் என்னிடம் சக்தியை உணர்கிறேன் (என்கிறாய்)' என்று கூறிவிட்டு, மௌனமாகிவிட்டார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் என் கோரிக்கையை நிராகரித்துவிடுவார்களோ என்று நான் நினைத்தேன். பிறகு அவர்கள், 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!' என்று கூறினார்கள்."