حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا قَالَ أَطْوَلُكُنَّ يَدًا . فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا، فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا، فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولَ يَدِهَا الصَّدَقَةُ، وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், "(மரணத்திற்குப் பின்) எங்களில் யார் உங்களைச் சென்று சேர்வதில் மிகவும் விரைவானவர்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் எவருடைய கை மிகவும் நீளமானதோ அவரே" என்று கூறினார்கள்.
ஆகவே, அவர்கள் ஒரு குச்சியைக் கொண்டு (தங்கள் கைகளை) அளக்கலாயினர். அவர்களில் ஸவ்தா (ரழி) அவர்களின் கை மிகவும் நீளமானதாக இருந்தது. (ஆனால்), கையின் நீளம் என்பது தர்மம் செய்வதையே குறிக்கிறது என்பதைப் பின்னர் நாங்கள் அறிந்துகொண்டோம். (அதாவது, தர்மம் செய்வதில் சிறந்தவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களே) எங்களில் நபி (ஸல்) அவர்களைச் சென்று சேர்வதில் மிகவும் விரைவானவராகவும், தர்மம் செய்வதை அதிகம் விரும்புபவராகவும் இருந்தார்.