அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் குடும்பத்தாருக்காக (அல்லாஹ்விடம்) நற்கூலியை நாடியவராகச் செலவிட்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகும்."
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன் குடும்பத்திற்காக (ஏதேனும்) செலவு செய்து, அதை அல்லாஹ்வின் வெகுமதியை நாடிச் செய்தால், அது அவருக்கு தர்மமாக (ஸதகாவாக) அமையும்.
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தன் குடும்பத்திற்காக (அவர்களுக்குத் தேவையான) செலவைச் செய்து, அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை நாடினால், அது அவருக்கு தர்மமாக (ஸதகாவாக) அமையும்.
وعن أبي مسعود البدري رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: إذا أنفق الرجل على أهله نفقة يحتسبها فهي له صدقة ((متفق عليه)).
அபூ மஸ்ஊத் அல்-பத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவர் தன் குடும்பத்தாருக்கு (அல்லாஹ்வின் திருப்தியை நாடி) நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தால், அது அவருக்கு ஒரு தர்மமாகும்.”