இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1628சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏ مَنْ سَأَلَ وَلَهُ قِيمَةُ أُوقِيَّةٍ فَقَدْ أَلْحَفَ ‏ ‏ ‏.‏ فَقُلْتُ نَاقَتِي الْيَاقُوتَةُ هِيَ خَيْرٌ مِنْ أُوقِيَّةٍ ‏.‏ قَالَ هِشَامٌ خَيْرٌ مِنْ أَرْبَعِينَ دِرْهَمًا فَرَجَعْتُ فَلَمْ أَسْأَلْهُ شَيْئًا زَادَ هِشَامٌ فِي حَدِيثِهِ وَكَانَتِ الأُوقِيَّةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعِينَ دِرْهَمًا ‏.‏
அபூஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு உகிய்யா மதிப்பிற்கு சமமான பொருள் தம்மிடம் இருக்க, எவரேனும் யாசகம் கேட்டால், அவர் வரம்பு மீறி யாசகம் கேட்டுவிட்டார். எனவே நான் (எனக்குள்) கூறினேன்: யாகூதா என்ற எனது பெண் ஒட்டகம், ஒரு உகிய்யாவை விடச் சிறந்தது. (ஹிஷாம் (அறிவிப்பில்) கூறினார்: அதாவது, அது) நாற்பது திர்ஹம்களை விடச் சிறந்தது. எனவே நான் திரும்பிச் சென்று, அவரிடம் எதையும் யாசகமாகக் கேட்கவில்லை. ஹிஷாம் அவர்கள் தனது அறிவிப்பில் மேலும் சேர்த்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு உகிய்யா என்பது நாற்பது திர்ஹம்களுக்கு சமமாக இருந்தது.
ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)
حسن (الألباني)