நபி (ஸல்) அவர்கள் ‘ஜிஃரானா’வில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்தார். அவர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருந்தார். அவர் தமது தாடியிலும் தலையிலும் மஞ்சள் சாயம் பூசியிருந்தார்; மேலும் அவர் மீது ஒரு மேலங்கி இருந்தது. அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்துள்ளேன். நீங்கள் பார்க்கிறபடி நான் இருக்கிறேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உம்மீதுள்ள மேலங்கியைக் கழற்றிவிடுவீராக! (உம்மீதுள்ள) மஞ்சள் நிறத்தைக் கழுவிவிடுவீராக! உமது ஹஜ்ஜில் நீர் என்ன செய்வீரோ, அதையே உமது உம்ராவிலும் செய்வீராக!" என்று கூறினார்கள்.