இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6599, 6600ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ، كَمَا تُنْتِجُونَ الْبَهِيمَةَ، هَلْ تَجِدُونَ فِيهَا مِنْ جَدْعَاءَ حَتَّى تَكُونُوا أَنْتُمْ تَجْدَعُونَهَا ‏ ‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ مَنْ يَمُوتُ وَهْوَ صَغِيرٌ قَالَ ‏{‏اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ‏}‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு குழந்தையும் ‘ஃபித்ரா’ (எனும் இயற்கை நெறியி)லேயே பிறக்கின்றது. அதன் பெற்றோரே அதனை யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ ஆக்கிவிடுகின்றனர். இது, விலங்குகள் (முழுமையான) குட்டிகளை ஈனுவதைப் போன்றதாகும். நீங்கள் அவற்றை அங்கஹீனப்படுத்தும் வரை, அவற்றில் அங்கஹீனமான எதனையும் நீங்கள் காண்கிறீர்களா?”

மக்கள் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! (அவர்களில்) சிறிய வயதிலேயே இறந்து விடுபவர்கள் பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح