"ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரழி) அவர்கள், 'குதைத்' என்னுமிடத்தில் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த ஒரு காட்டுக்கழுதையின் காலை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அதை அவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்."