(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி வருவாள். அவள், "தவாஃப் செய்வதற்காக எனக்கு ஆடையை இரவல் தருபவர் யார்?" என்று கேட்பாள். (கிடைக்கும் ஆடையை) தன் மர்ம உறுப்பின் மீது வைத்துக்கொள்வாள். மேலும் அவள், "இன்று (உடலின்) ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ வெளியாகலாம்; (அவ்வாறு) எது வெளியானதோ, அதை நான் ஆகுமானதாக ஆக்கமாட்டேன்" என்று கூறுவாள். அப்போது **"கூதூ ஸீனத்தக்கும் இன்த குல்லி மஸ்ஜிதின்"** (ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்) என்ற இந்த வசனம் அருளப்பட்டது.